பைந்தமிழ்ச்சுடர்
அன்னபுத்திரன்
கோடை வெயிலும் கொளுத்துறது
கொடுமை கனத்தே வருகிறது
வாடை எங்கோ தெரியவில்லை
வானும் வெளுத்துக் கிடக்கிறது
பாடை போவோர் அதிகரிக்க
பாவம் என்று யாருரைப்பார்
ஆடை கட்டி அலங்கரித்தால்
அகலா வழுக்கென்(று) அறிவீரோ! 1
வாடை எங்கோ தெரியவில்லை
வானும் வெளுத்துக் கிடக்கிறது
பாடை போவோர் அதிகரிக்க
பாவம் என்று யாருரைப்பார்
ஆடை கட்டி அலங்கரித்தால்
அகலா வழுக்கென்(று) அறிவீரோ! 1
ஆட்டம் போடும் அகிலத்தில்
அறிவும் மறையும் மானிடத்தில்
கூட்டம் கூட்டிக் கொடுமைகளும்
கொல்லு முனையும் அறிவாயா?
காட்டு மோர்நாள் கண்டறிவாய்
காமம் வேண்டா கற்றறிவீர்
ஏட்டில் சுரக்கா யென்றெழுதின்
ஏற்கா நாவும் சுவையதனை! 2
அறிவும் மறையும் மானிடத்தில்
கூட்டம் கூட்டிக் கொடுமைகளும்
கொல்லு முனையும் அறிவாயா?
காட்டு மோர்நாள் கண்டறிவாய்
காமம் வேண்டா கற்றறிவீர்
ஏட்டில் சுரக்கா யென்றெழுதின்
ஏற்கா நாவும் சுவையதனை! 2
தேடும் உறவை நல்லொழுக்காய்
தேவை யறிவின் உனதுள்ளம்
வீடும் போற்றும் வினையகன்றே
விளங்கு வாய்நீ அதையறிந்து
தேவை யறிவின் உனதுள்ளம்
வீடும் போற்றும் வினையகன்றே
விளங்கு வாய்நீ அதையறிந்து
நாடும் புகழும் நாவடக்கால்
நலதாய் மகிழ்வாய் நானிலத்தில்
காடும் ஏற்கும் கனிந்துருகி
கடப்பீர் கனிவாய் வாழ்வதனை! 3
நலதாய் மகிழ்வாய் நானிலத்தில்
காடும் ஏற்கும் கனிந்துருகி
கடப்பீர் கனிவாய் வாழ்வதனை! 3
பொறுமை யதனைப் போற்றிமதி
பொறாமை யுன்னை வீண்செய்யா
வறுமை நிலைதான் வந்தாலும்
வளமாய் சிறக்கும் வாழ்வியலும்
சிறுமை யென்றே ஏற்றறிவாய்
சீறும் நாகம் தீண்டாது
உறுதி யுனக்கே நிச்சயிக்கும்
உறுத்தும் பகைமை மனங்களுக்கு! 4
பொறாமை யுன்னை வீண்செய்யா
வறுமை நிலைதான் வந்தாலும்
வளமாய் சிறக்கும் வாழ்வியலும்
சிறுமை யென்றே ஏற்றறிவாய்
சீறும் நாகம் தீண்டாது
உறுதி யுனக்கே நிச்சயிக்கும்
உறுத்தும் பகைமை மனங்களுக்கு! 4
No comments:
Post a Comment