பைந்தமிழ்ச்சுடர்
அன்னபுத்திரன்
தப்புகள் வாராமல் ஓடோடி
வந்துநீ
     தாங்குவாய் மக்களைப் பாதுகாத் தே
இப்புவி வாடுதே இக்கண மெங்களை
    ஏற்றருள் நல்குவாய் ஐங்கர னே!                          1 
ண்ணகி என்றுநீ பெண்ணொரு
பத்தினி
        காத்திடு மெங்களைக் கற்பர சி!
வண்ணமாய் வந்தீரே கன்னனூர்த் தாயாரே
        வாடிடும் மக்களைக் காத்தரு ளே!                   2
வந்தது நோயுமே மாற்றுவாய்
நீயுமே
        வாழட்டும் மக்களும் நோயின்றி யே!
தந்தரு ளேகுவாய் காப்பாற்று அம்மையே
       தாவித்த வித்திடும் மக்களை யே!                     3
ஆயிரங் கண்ணுடை யாளருள்
போதுமே
       ஆவலாய் நாமிருந் துன்னைவேண் டி!
வாயிலே தோன்றிடு மந்தவ ரக்கனை
        வாசலால் ஓட்டுவாய் பத்தினி யே!                   4
எத்தனை காலங்கள் இப்படி
நோயதால்
        ஏங்கித்த வித்திருந் தாளுவ து!
உத்தமி நீயதை உன்னரு ளாலேதான்
        ஊராலே போக்கணும் ஓடிவா ராய்!                
5
பட்டினி என்றொரு பாதகம்
எங்களைப்
        பாரெல்லாம் வாட்டுது கண்டிடு வாய்!
விட்டுநீ மாற்றுவாய் வேளைக்கு உண்டுமே
        வீட்டுக்குள் எத்தனை நாட்களம்
மா!               6
கோலத்தை மாற்றிப்போ 
கோமக னும்விழ
         கோடியைத் தாண்டுது பாரும்மம்
மா!
ஆலத்தை மாற்றிநீ வுன்னருள் தந்திடு
        ஆதியில் இவ்விடம் வந்தமர்ந் தாய்!                
7
சோதனை யென்றொரு கட்டுக்கு
ளெங்களைச்
         சோதிக்கு மர்த்தங்க ளெத்தனை யோ!
வேதனை கொண்டொரு காலங்க ளோட்டியே
         வேடிக்கை பார்க்காதே பத்தினி
யே!             8  
கர்ப்பிணித் தாயவ ளேங்கிடு
மின்னேரம்
          கச்சித மாகவே பாதுகாப்
பாய்!
அர்ப்பணித் தோமெம்மை மீட்டிடு அன்பினால்
         அற்புத மாகவே காத்தரு ளே!           
              9
தொட்டிலில் பிள்ளையும்
சோவென்ற ழுகுது
        தொட்டணைத் தாலாட்ட ஏங்கும்தா யும்!
முட்டியே மோதித்த வித்திடு மெங்களை
        முன்வந்து தாங்கிடு பத்தினி யே!                     10
பாட்டியும் பூட்டணும் நிம்மதி
யற்றுமே
        பாதகன் வந்ததால் பாடுபட் டே!
வீட்டிலே இப்படி உண்பதற் கில்லாது
         வீண்கதை கேட்கிறார் பாருமம்
மா!                11
சாலைகள் மூடியே சோவென்றி
ருக்குது
        சந்ததி ஏங்குது நீண்டநா ளாய்!
சோலைம யில்வந்து தோகைவி ரித்தாடி
        சோகத்தை மாற்றுது எங்களூ ரில்                   12
மூவேளை உண்பதற் கில்லாதோர்
கூக்குரல்
         மூவுல கெங்கிலும் கேட்குதை யோ!
தாவேலை யென்றுமே தேடிடும் மாந்தரும்
         தத்தளித்
தேங்கிடும் காலமன் றோ!               13
ஆண்டவன் சந்நிதி ஆறுதல்
வேண்டியே
        அம்பாளைக் கூப்பியே கும்மிபா டி!
மாண்டவர் அத்தனை பேருக்கும் அஞ்சலி
        மாலைக ளாகவே போட்டிடு வோம்!               
14
வாழிய வாழிய நீடுழி வாழிய
        வாழணும் வையகம் நீடுழி யே!
வாழிய நீயுமே உந்தனின் கீர்த்தியால்
        வாழ்வாங்கு வாழணும் வாழிய வே!                
15

No comments:
Post a Comment