'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Aug 14, 2020

வேண்டுமென வேண்டுவது

                                                   பைந்தமிழ்ச் செம்மல் 

                                             நெடுவை இரவீந்திரன்

சென்ற இதழில் வெளியான கவிஞர் மெய்யன் நடராஜ் அவர்களின் வேண்டாவென வேண்டுதற்கு எதிர்ப்பாட்டு.

 

முகநூலில் தமிழ்கற்க முயல வேண்டும்

    முடிதன்னை அழகாக முறிக்க வேண்டும்

நகங்கூட வளராமல் நறுக்க வேண்டும்

    நாகரீக மாகவே பேச வேண்டும்

சுகமாக இரவெல்லாம் தூங்க வேண்டும்

    சோம்பேறி யில்லாத வேலை வேண்டும்.

தகராறு செய்யாமல் பழக வேண்டும்

    தனித்திருந்து தவத்தினிலும் நிற்க வேண்டும்

 

சீதனத்து வரவையென்றும் தவிர்க்க வேண்டும்

    சினமின்றி பணிகளையும் செய்ய வேண்டும்

நாதனென்னும் கருவத்தை நசுக்க வேண்டும்

    நற்பண்பை நாடுகின்ற நண்பன் வேண்டும்

 வேதனத்தைப் பேசும்போது விடுதல் வேண்டும்

    வேள்வியெனக் காதலையும் வெல்ல வேண்டும்

காதகத்தைப் புரியாமல் காக்க வேண்டும்

    கைக்கொடுத்தோர் கைதயனைக் காக்க வேண்டும்

 

பாக்குவெட்டிக் குள்சிக்கும் பாக்கைப் போலப்

    பகைமுறித்து பாசத்தைப் பாய்ச்ச வேண்டும்

நாக்குனதே என்பதனால் நல்ல பேச்சை

    நாளெல்லாம் பேசிடவும் நாட வேண்டும்.

வாக்கொன்று கொடுத்தபின்னே வாகாய் அஃதை

    வாழ்நாளும் வளைமையுற மாற்ற வேண்டும்

ஏக்கங்கள் பலவாறாய் இருந்தால் கூட

    எழில்முகத்துச் சிரிப்புடனே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment