'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 19

 கட்டளைக் கலித்துறை

1.       கவிஞர் வ.க.கன்னியப்பன்

மூளும் பொறாமைதான் முந்துறா மல்,மெய்ம் முயற்சியுடன்

கேளென யாவருங் கெட்டியாய் நட்பாங் கிளமைகொண்டு

நாளைய நாட்டின் நலமெண்ணித் தன்மையாய் நாமுணர்ந்து

நாளும் தமிழை நனிமகிழ் வோடு பயிலுவமே!


2.       கவிஞர் பொன் இனியன், பட்டாபிராம் 

நீளு மரபின் நினைவொழி யாமலே நித்தநித்தம்

ஏலும் படிக்கே இலக்கணஞ் சேர்கவி எல்லவரின்;

கோளுங் குறியும் கொளுவுத லாகநாம் கொண்டினிதே

நாளுந் தமிழை நனிமகிழ் வோடு பயிலுவமே

No comments:

Post a Comment