'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

வனவளம் பேணி மலர்வாரே!

 பைந்தமிழ்ச் செம்மல் செல்லையா வாமதேவன்

 (தான தந்தன தானா தனானன

  தான தந்தன தானா தனானன

  தான தந்தன தானா தனானன தனதானா)


 காடு கண்டறி காணா தநூறறி

  கான கந்தரு காரா குநீரறி

    கால பந்தம தோடே உலாவுநன் னிலையாலே

காய முங்குறை நோயா குபாதியின்

  கார ணங்களை ஆரா யுமாதியர்

    காவ லென்றுயர் பேறா னமூலிகை அறிவாரே


பாடு மின்குயில் பாகா னவோசையும்

  பாலி அஞ்சிற கோடா டுமாமயில்

    பாரி லெங்கணு மூடா டிவாழுப றவையோடே

பாயு சிங்கமும் பாலா கிவீழ்நதி

        பாவு கங்கையில் நீரா டுயானைகள்

          பாதி வெம்புலி மானோ டுநாகமும் அருகாமே

 

கூடு கொண்டுற வாலூ டுபேடைகள்

  கூவி அங்கல காலோ துசீரிணை

    கோல வெண்பனி பூவா கமூடிய வரைமேலே

கோதி யின்கனி கோடா டுமாகவி

        கோக முந்திரு வாயா டுபூவணி

          கோக யங்கரை யோடா டுகோடரம் இனிதாமே

 

நாடு தென்றலின் ஓயா வியாபகம்

  நாடி நின்றுயர் வோடே குதூகலம்

   நாரி நன்றிய தாலே வினாசமும் நினையாரே

நாடு பண்பொடு வாகா கநாயகர்

       நாணு நங்கைய ரோடே அலாதியில்

         நாளு மன்புடன் வேரா குவாழ்வினில் மலர்வாரே!

 

(பாலிவிரித்த

பாதிகொடிய

கோகம் - உலர்ந்த பூ

கோகயம்தாமரை

கோடரம் - சோலை, குதிரை)

No comments:

Post a Comment