பைந்தமிழ்ப் பாமணி மாலா மாதவன், சென்னை
கடவுள் வாழ்த்து
வல்ல கணபதியே! வாணி சரஸ்வதியே!
சொல்லில் அமர்ந்து சுகம்தருவாய் - நல்லதோர்
ஏற்றத்தைத் தந்திடுவாய் என்றும் எமக்கிந்த
ஆற்றல் அமையவுன் காப்பு
குரு வணக்கம்
கற்றலில் கற்றோங்கிக் கல்வியைப் போதித்த
நற்பெரும் ஆசா னருள்!
வளம் கொழிக்கும் பாரதம் (கட்டளைக் கலித்துறை)
பாரதம் போற்றிப் பலப்பல பாடல் பலமிதுவே!
பா! ரதம் பாரீர்! பலவகை காணீர்! படையிதுவே!
சாரதி நாமே! சகலரும் சேர்வோம்! சகமினிக்க!
வா! ர தமிழுக்க! வையமும் போற்ற வழியிதுவே! 1
நாடுநம் நாடு நமதுபொன் நாடு நலம்பெறட்டும்
காடு கரையோடு காணும் வளத்தில் களிப்புறட்டும்
தேடும் சிறப்போடு தேர்ந்த வழியில் தெளிவுறட்டும்
வீடும் சுகமாகும் வீதி சுகமாகும் சங்கிலியே! 2
ஆற்றை இணைத்தபின் ஆற்றல் பெருகும் அறிந்திடுக
காற்றலை வேகம் கவின்மிகு மின்சாரம் கூட்டிடுக
மாற்றுப்பா தையில் மலைகள் மடுக்கள் இணைத்திடுக!
மாற்றுக் குறையா மனிதர்கள் என்றிரு வாழ்வினிதே! 3
வித்தை களேற வினைகளில் வெற்றி விரைவுபெறும்
வித்தையில் புத்தியே வேண்டும் அடித்தளம் விண்ணளப்பர்
புத்தியைத் தீட்டிடப் பூக்குமே உத்தி புதுப்பொலிவாய்
புத்தியும் சக்தியும் பூரணம் பூக்கப் புதுவளமே! 4
கோத்திடு கைகள் குறைகள் எதற்கிங்கு கூடிவிடு
காத்துக் கிடக்காதே கற்பகம் இந்நாடு கையைத்தட்டு!
பூத்ததே பூமியில் பூவாக எம்நாடு பூமணமே!
சாத்திரம் ஆயிரம் சாமியோ ஒன்றது பாரதமே! 5
No comments:
Post a Comment