'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 16, 2020

நெஞ்சு நெகிழுதடி கிளியே

 பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதிராசேந்திரன்

 கிளிக் கண்ணி

கன்னக் குழியழகி காதல் மொழிபேசி

என்னைக் கவர்ந்தாயடி- கிளியே

எனக்குள் கனிந்தாயடி

 

அள்ளி நிறைந்தொழுகி அன்பினில் நாமும்

துள்ளிக் களிப்போமடி - கிளியே

உள்ளம் கலப்போமடி

 

கொஞ்சு தமிழில் மழலையாய்ப் பேசுகிறாய்

நெஞ்சு நெகிழுதடி - கிளியே

நித்தம் மகிழுதடி

 

தென்றலாய் வந்தென்னைத் தீண்டுகிறாய் நாளும்

மன்றம் அழைக்குதடி - கிளியே

மையலும் பெருகுதடி

 

வண்ணத்துப் பூச்சியாய் வட்ட மடிக்கின்றாய்

எண்ணம் சிலிர்க்குதடி - கிளியே

ஏதேதோ சொல்லுதடி

 

காதலைப் பாடியே போதையை ஏற்றுகிறாய்

கையில் வருவதெப்போ - கிளியே

கடிமணம் புரிவதெப்போ

No comments:

Post a Comment