பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் தனதானா ( அரையடிக்கு )
சடாமுடி யிலேபிறை நிலாவுந திசூடிய
தயாபர னினாசியிற் கவிபாடும்
சதாசிவ னினாமம துநாவிலு ரைவோரது
சகாவென வராதிருப் பவனோநீ
விடாதுவ ருதீவினை களோடவி டுமீசனை
விடாதென துபாடலிற் பதிவேனே
விதேகம துதாவென உமாபதி யைநாடிட
விபூதியொ டுபேரருட் புரிவானே !
சுடாதப னிமாமலை யிலாடுசி வனாரது
சொரூபமி கவேஎழிற் சிலைபோலும்
சுகானுப வனாயரு ளுமாகயி லையானது
சுவாலையொ டுதானொளிப் பிழம்பாக
அடாதன வெலாமறை யஞானவொ ளியாலுளம்
அளாவிம கிழ்வோடுசற் குருவோடே
அநாதிய வன்நீழலி லுலாவுவ ரமேதரும்
அராவணி யுமீசனைப் பணிவேனே !!
விதேகம் - தேக விமோச்சனம்
அடாதன - தகாதன
No comments:
Post a Comment