7.
புலவர் இரா. மாது
கவிஞர் அழைப்பு
திருச்சிவாழ் பாவலரே! தீந்தமிழ்க் காவலரே!
அருள்நெறி நாவலரே! ஆன்மீக ஆர்வலரே!
பரிவுடன் பண்புமிக்க பட்டிமன்ற நாயகரே!
மரபுமீது கொண்ட வளமான காதலால்
வரதனார் சோலையில் வாஞ்சையு டன்பயிலும்
கருணை மிகுந்தவரே! கம்பனில் தோய்ந்தவரே!
இருகைகள் கூப்பியுமை ஏருக்குச் சீர்செய்ய
வருகவென இம்மன்றில் வாழ்த்திவர வேற்பேனே !!
இலக்கியச் செம்மலே வருக! இன்கவி தருக!
தமிழ் வாழ்த்து !
வல்லோர் அறிவில் வளர்ந்திட்டாய்
எந்நாளும்
நல்லோர் மொழியில் நடம்கொண்டாய் - அல்லோர்
மகிழ்ந்து புகழ்ந்திடும் வண்டமிழே தாயே
நெகிழ்ந்து பணிந்தேன் உனை.
தலைவர் - அவை வாழ்த்து
கருத்துறப் பாதா என்றிடும்
தலைமைக்
கருத்தம் மாவுனை வணங்கி
விருப்புடன் பாவை விசையுறப்
பதிவி
வேகனைச் சாலவே போற்றி
அருத்தமாய்ப் பாவும்
தேர்ந்திட விளக்கும்
அருமையர் பாவல வாரா
வருவர தாயான் பாவினால் நும்மை
அவையினை வணங்கினேன் யானே!
(கருத்தம்மா - சியாமளா - கருத்தோடு செயலாற்றும் அன்னை
வாரா வருவரதா - நேரில் வாரா
பாவலர் - முகநூல் மூலம் வரும் பாவலர்)
ஏருக்குச் சீர் செய்வோம்
1. கலித்தாழிசை
பாராண்ட மன்னரும் பணிந்துநிற்பர் யாரை?
போராண்ட வீரரும்
போற்றிநிற்பர் யாரை?
சீராண்ட பாவலர் சிந்தைசெய்வர் யாரை?,
ஏராண்ட நம்பியைப் பீடுடை உழவரை
யேற்றமிகு எம்பியைக் காட்டு
2. நிலைமண்டில ஆசிரியப் பா
வடிசாறு வார்த்துச் செழிக்கும் வணிகர்
கொடிய மதுவை யருந்தும் மாக்கள்
மடிநோக்குச் சூதினைக் காட்டும் சூழ்ச்சியர்
கடிபோ யாடிக் களிக்கும் பதர்கள்
அடிச்சேறு கண்ட உழவன் தனக்குப்
பிடிசோறு மின்றி நாளும் வருந்தி
மிடிநோக்கச் சாதல் அறிந்தும்
திருந்தார்
உடைநா டுற்றசீர் குன்றிக் கெடுமே
!
3. கட்டளைக் கலித்துறை
படைப்பத னாலே படைப்போன் எனநான் வணங்குவனோ
மடைக்கோலிக் காத்தலால் மாலன்!எனவே வழங்குவனோ
படைகொண்டு காக்கும்நற் பாங்கினில்
நம்பன் பரசிவனோ
விடையினால் ஏரோட்டும் வீரரால் மானுடம் வென்றதம்மா
4. நேரிசை வெண்பா
கொஞ்சும் பசுங்கிளியே கேளிதுநீ என்னவன்
விஞ்சுபுகழ; ஏராளும் வித்தகன் - மஞ்சுசூழ்
நாவிலன்னம் தந்து நலங்கூட்டும் அன்னாரை
ஆவியென அன்பால் அணை.
வாழ்த்து !
ஏராளும் நம்பியை ஏற்றமிகு பாக்களால்
சீராகப் போற்றிச் சிறப்பித்தீர் ! - பாராட்டச்
சொற்களைத் தேடித் தொலைகிறேன் என்றுமுமை
வெற்றிகள் சேரும் விழைந்து.
★★★
No comments:
Post a Comment