'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 12


கலிவிருத்தம்

1.       கந்தையா நடனபாதம்
முயற்சி நிறைய முகமுந் திளைக்கும்
அயற்சி புகுந்தால் அமைதி விலகும்
செயலைச் திருந்தச் செயலே சிறப்பாம்
வியந்து நயக்க விலகு மிருளே !

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

2.       ..கன்னியப்பன், மதுரை
கயமையை நீக்கிக் கனிவுடன் வாழ்தற்
குயரிய கொள்கையை யுள்ளத்தி லெண்ணிச்
செயமு மடைந்திடச் சிந்தையிற் கொண்டு
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்

3.       மெய்யன் நடராஜ்
பயிலா ததுவைப் பயின்று முறையாய்
முயலும் வகையோர் முயற்சி யெடுத்து
வியக்கார் வியக்க விருந்து படைக்கும்
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்

நேரிசை வெண்பா

4.       செல்லையா வாமதேவன்
செயலைத் திருந்தச் செயலே சிறப்பாம்
அயலுந் திருந்தும் அதனால் - முயல
வயலும் மலரும் வறுமை கருகும்
துயரைத் துடைக்கத் துணி.

5.       பூங்கா   சண்முகம்,  புதுச்சேரி
நயன்தூக்கி  நன்மை   விளைப்பன  வேனும்
வியனுலகின்   மேன்மைக்   கெனினும்  --  உயர்வாம்
செயலைத்   திருந்தச்  செயலே  சிறப்பாம்
பயனிலவாம்  பண்பிற்  பிழை

No comments:

Post a Comment