சுறவம்பாவை - தமிழினப் பண்பாட்டு மீட்புப் பனுவல் ஆகும்.
அறிவியலுக்கொவ்வாத சித்திரை
1 (ஏப்ரல் மாதம்... கடுங்கோடைக் காலம்) தமிழ்ப்
புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள்!
ஆடியில் விதைத்துச் சுறவத்தில்
(தைத்திங்கள் என்னும் சனவரியாம்... வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே
சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி, சுறவம் முதல்நாளே தமிழ்ப்
புத்தாண்டாம்…!
இக்கருத்தை வலியுறுத்தும்
முகத்தான், திருப்பாவை, திருவெம்பாவை வரிசையில் எந்தமிழர் இனமோங்க, எந்தமிழின் புகழோங்க,
நம் புத்தாண்டான சுறவம் திங்களைப் பாவையாக முன்னிறுத்தித், தமிழ்கூறு நல்லுலகில் முதன்முதலாக,
மரபுமாமணி பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன் அவர்களால் இயற்றப்பட்ட சுறவம்பாவை பனுவலைச் சுவைத்து மகிழலாம். இக்கருத்தியல்
எம் பெருமையை மீட்டெடுக்கக் கூடிய போர்வாள்.
அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளது இப்பனுவல். தரவிறக்கிப் படியுங்கள்.
கவிஞர், தமிழர் என்றெல்லாம் திரிந்து கொண்டிருக்கும் இனவுணர்வாளர்களே! தமிழ் உணர்வைக் காட்டித் திரியும் தமிழுள்ளங்களே! வெறும் பட்டத்திற்கும் சான்றிதழுக்கும் மட்டுமே உங்களை அடகு வைத்துவிடாதீர்.
இலவச அமேசான் கிண்டிலில் இலவசமாகவும் படிக்கலாம். தவறாமல் அமேசானில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment