1. கவிஞர் பொன்.இனியன், பட்டாபிராம்
திகழ்செம் மொழியேநற் றேன்றமிழ்த் தாயே
புகல்வன வெல்லாம் புவிக்கே - இகலற
நீடவும் எண்பத மோங்கவு மாயுன்றன்
பாட மருள்வாய் பயந்து
2. கவிஞர் பூங்கா சண்முகம்
பாட மருள்வாய் பயந்துபயன் நோக்கிநெஞ்சே
கேடகத்தை ஏற்றியிசை கேட்போர்முன் - கோடமர்ந்த
ஆடகப் பொற்கழலோய் தாள்தந்து ஞானமூட்டிப்
பாடமருள் வாய்பயந்தோய் நீ.
No comments:
Post a Comment