6. பைந்தமிழ்ச்செம்மல் இரா.கண்ணன்
(சிந்து பாடல்)
எழுத்தால் நம்மினம் எழுக - களம்
நுழைக
- இடர்
களைக -
இனி
எதிரிகள் நமைவிட்டு ஒழிக - எங்கும்
எரிமலை போலெழுவாய்
எந்தமிழின் காவலன் நீ
எத்தனைநாள் பொறுப்பது விழைக 1
தமிழன் நீ தலைமையை ஏற்றுப் - புவி
மாற்று
- ஒளிக்
கீற்று - நீ
தன்மானச் சிங்கமெனச் சாற்று – வரும்
தடைகளை உடைத்தெறி!
தமிழன்நீ வரிப்புலி!
தமிழ்தானே நம்மூச்சுக் காற்று 2
தீந்தமிழ் அழிக்கிற கூட்டம் - கை
நீட்டும் - நமை
வாட்டும் - அது
தேவையின்றிச் சட்டங்களைத் தீட்டும் - நாமும்
திமிருடன் களம்புகத்
தீந்தமிழர் ஒற்றுமையில்
தலைதெறிக்க எடுக்குமது ஓட்டம் 3
எப்பொழுது வந்ததிந்த இந்தி - இல்லை
முந்தி - இதைச்
சிந்தி - அது
இப்போது வருகுதிங்கே பந்தி - இங்கு
இதிலென்ன குறையென்னும்
எந்தமிழை கறைபண்ணும்
எத்தர்கள் ஓலமதை நிந்தி 4
மக்களை ஓரணியில் கூட்டு - தீ
மூட்டு
- கொடி
நாட்டு - நம்
வரலாற்றைப் பகைவர்க்குக் காட்டு - மேலும்
வருங்கால சந்ததிகள்
வளமாக வாழ்வதற்கு
மண்ணைவிட்டுப் பகைதன்னை ஓட்டு 5
பெயருக்குத் தமிழென்பா ருண்டு - இலை
தொண்டு - இதை
கண்டு - மனம்
பொங்கியெழ வேண்டும்வெ குண்டு - நாளும்
புயலெனக் களம்நோக்கிப்
புறப்படு தொன்மைத்தமிழ்ப்
பகைவர்க்கு நீயோர்வெடி குண்டு 6
எழுத்தெனும் ஆயுதம் ஏந்தித் - தமிழ்
சிந்தி - அவை
முந்தி - நாளும்
இலக்கியத் தமிழ்க்கடல் நீந்தி - வரும்
இடர்களைப் புறந்தள்ளு
என்றுந்தமிழ் நிலையாக
இருக்கணும் இதயத்தில் குந்தி 7
No comments:
Post a Comment