'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

சோலைக் கவியரங்கம் - 9


     14. பைந்தமிழ்ப்பாமணி ஷேக் அப்துல்லா

என்ன தவம் செய்தேன் !

காலம் வகுத்தோர் கணக்கிற்கே
கற்றதை வாழ்வழக்கு வாழ்த்தினில்

ஆழுழுத வெண்ணத்திற் பாக்களால்
ஆக்கினேன் ஆன்றோரே குறையிருப்பின்

தாழ்மையுடன் எம்வேண்டுகோல் ஏற்பீர்
தகுந்த வழிகாட்டின் ஆனந்தம்

சாலச் சிறந்தோர் அவையோருள்
சாற்றும்... திறன்தேடும் உங்கள்

நலன்நாடும் அன்பன் சிறியோன்
நகைத்து விடாதீரே நட்பு.

என்ன தவம் செய்தோம் !

(எண்சீர் சந்த விருத்தம்)
சந்தம் அரையடிக்கு:
தானானா தானானா தானானா தானா
(விருத்தம்: காய் . . மா)

தாமென்றே வேரில்லா வேறென்றே தோன்றாத்
தனித்தன்மை வேற்றொலியில் லாதோர்சொல் நீண்டே
ஓமென்றே ரீங்காரத் தோடும்நீ யுள்ளில்
ஊதாமற் றானாய்த்தா னோயாதே யெம்மில்!
மாமொழியின் விந்தையையோ யெழுத்தாக்க வடிவால !
மாமதிதா மதில்மூழ்கி யிடத்துமொழி யொலியால்
ஓமென்றும்! ஹூவென்றும்! மந்திரமோ நெய்தோர்
யூகத்தில் நாமிருக்க வென்னதவஞ் செய்தோம் !

பேசும்தன் வீச்சுரையிற் தாக்கமிடுஞ் சிங்கம்
பேரறிங்க ராக்கிவிடும் தொன்மையதன் சங்கம்
பூசும்வே டமெதுவாகி னோடிவிடும் முடிவில்
பூமகளும் முதலிற்றான் பேசியதோ தமிழில்
கூசும்பண் பதனிலூறி வளர்த்ததாற் தீண்டக்
கோபம்தோன் றாதென்றே குறுக்குவழி நோண்டும்
வீசுகின்ற வீத்தைகளும் தானேதோற் றோடும்
வெற்றிமகள் பெற்றதனா லென்னதவஞ் செய்தோம்!

மாநிலத்தி லேநம்தோற் றங்கள்தந் திம்மண்
மனிதர்தா மோர்குலமொன் றென்றவதன் நற்பண்
நாநிலத்து மானிடரும் நம்மினத்தை வாழ்த்தும்
நாடிவந்த பசுவிற்கும் நல்நீதம் தந்தோம்!
பாநிலமன் றோ!பாக்கள் பலதாலே தைத்தே
பண்புகளின் பாதைகளிற் பண்படவே வைத்தே
நீநிலமென் றெண்ணும்மெய் ஞானிகளிற் துய்த்தே
நிலமிதில்பி றக்கநாமு மென்னதவஞ் செய்தோம்!

ஆடுகளச் சூழலமைந் தாகுவிதங் கொண்டும்
தாளத்தின் ராகத்தோ டாட்டமதுஞ் சென்றும்
பாடுமிடம் பண்பட்டோர் சங்கமாகி னின்பம்
பாவலரெம் மாவரதர் ராசர்முன் சொர்க்கம்
ஓடுகிறோம் ஊட்டுகின்ற நற்றமிழின் வழியில்
உள்ளவர்க ளுள்ளமெலாம் செம்மைவழித் தெளிவில்
பாடுபட்ட விளைவதனிற் பக்குவத்தை மெச்சும்
பகலவனின் மாணவரா கென்னதவஞ் செய்தோம் !

நாகரீக மென்றிங்கே நம்மவரிற் றானே
நமுயிர்தான் செம்மைசொழித் தநம்மொழியை வீணே !
மோகம்கொண் டேதிரியும் மூடர்கள் தாக்கம்
மோதுகின்ற தம்காலை தாம்வெட்டும் போக்கும்
சோகங்கள் தொடராதே முறித்துவிட வேண்டும்
சோதனையைச் சாதனையால் வெல்வதனிற் தூண்டும்
தாகம்தீர் பைந்தமிழின் சோலையதிற் கண்டோம்
தரமுயர்த்தி விருதினைவாங் கென்னதவஞ் செய்தோம் !

ஆசுகவிங் கர்களாக வாகிவிடும் தன்மை
ஆகிடுவோ ராண்டுவிழா விற்றானே வுண்மை
பேசுகின்ற பொருட்தன்னை அவையோரே தந்தே
பெற்றயிவர் கற்றதிறன் மற்றோர்கள் பார்த்தே
வீசுபுகழ் சோலைபெறக் காரணரே வித்தே!
வீணாகா துங்களுழைப் பதில்வென்ற முத்தே !
பாசுரங்க ளில்மாண்பைப் பாடுகிறோ ரான்றோர்
பங்குகொள்ள யிவ்வரங்கி லென்னதவம் செய்தோம்!

No comments:

Post a Comment