பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதிராசேந்திரன்
பிறப்பெல்லாம் ஒன்றே பிரிவேது மில்லை
பிறப்பின் சிறப்பே மனிதனாய் வாழ்வதே
படைப்பெல்லாம் ஒன்றே பாகுபா டில்லை
படைப்பின் பயனே பழுதிலாமல் வாழ்வதே
பண்பால் சிறக்கும் பழகுதமிழ் வாழ்க்கை
பழிதுடைத்(து) என்றும் வாழ விடும்
பாடுகின்ற பாக்கள் பொருள்பொதிந் திருந்தால்
பாங்குடன் நிலைத்துப் புகழும் கொடுக்கும்
படிப்பற்ற வாழ்வு பயனற்றுப் போகும்
பகுத்துணர்ந்து படித்தால் பெரிதாகும் வாழ்வு
பிறப்பின் உரிமை இறப்பின் முடிவு
இருக்கும் வரையில் இனிமையாய் வாழ்க
No comments:
Post a Comment